பொங்கல் விழா

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில்...
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்,  மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் புவனேஸ்வரி, கோமதி, கவிதா, பாரீஸ் அம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு  பொங்கல் வைத்தனர்.
மண்டலத் தலைவர்கள் அயூப்அலி, ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவு நிர்வாகிகள் பெரியசாமி, மாதேஸ்வரன், கண்னையன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கே.என். பாட்ஷா, முகமதுஅர்சத், சாகுல்அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் விநியோகிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பழனிசாமி, கொடுமுடி வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கலா, மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல்  வைத்தனர். 
இந்நிகழ்ச்சியில்,  கிறிஸ்தவ தலைமை போதகர் சூசை,  சலீம்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இதில், மாவட்ட பொதுச் செயலாளர் சீதாபதி,  மாவட்ட சிறுபான்மை தலைவர் வினோத்குமார், செயலாளர் கிருஷ்ணன், முருகேசன், துரைராஜ், வாசுதேவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் விஜய் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். இதையொட்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நல்லூரில்...
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பண்ணாடிபுதூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கான வழுக்கும் மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.
பண்ணாடிப்புதூர் பாரத் கிங்ஸ் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி  நடைபெற்ற வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் ஏராளமான இளைஞர்கள்  பங்கேற்றனர். 
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டி, லக்கி கார்னர், சட்டி உடைத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னிமலையில்...
திருவள்ளுவர் தினத்தையொட்டி,  சென்னிமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மன்றாடியார், சென்னிமலை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்,  சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர், நகரத் தலைவர் குமரேசன், கந்தசாமி, ஐயப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். 
திருக்குறள் பேரவை சார்பில், தமிழாசிரியர்கள் மாலை அணிவித்தனர். அரிமா சங்கம் சார்பில், நந்துமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

சென்னிமலையில் தமாகா சார்பில்...
சென்னிமலை நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், கிழக்குப் புது வீதி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 
விழாவுக்கு,  கட்சியின் நகரத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை  முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பேசினார். 
இதில், மாநில இளைஞரணி செயலாளர் கந்தசாமி, மாவட்டச் செயலாளர்கள் கதிரேசன், ஐயப்பன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஜெகதீஷ்குமார் உள்பட பலர் கலந்து  கொண்டனர். நகரப் பொருளாளர் முத்துகணேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com