அம்மா திட்ட முகாம் 

அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் கிராமத்தில் வருவாய்த் துறை சார்பில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கெட்டிசமுத்திரம் கிராமத்தில்
அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் கிராமத்தில் வருவாய்த் துறை சார்பில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் வி.விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் எம்.பானுரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. 
முதியோர், விதவை உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல், புதிய குடும்ப அட்டைகள் கோருதல், பட்டா மாறுதல் உள்பட மொத்தம் 25 மனுக்கள் பெறப்பட்டு துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதில், கெட்டிசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெருந்துறையில்.... 
பெருந்துறை, ஜன. 18: சென்னிமலை ஒன்றியம், தென்முக வெள்ளோடு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                
முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமி தலைமை வகித்தார். முகாமில், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, நலத்திட்ட  உதவிகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன.                
இதில், அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பெருந்துறை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com