சீனாபுரம் ரிச்மாண்ட் பள்ளி ஆண்டு விழா
By DIN | Published On : 29th January 2019 01:50 AM | Last Updated : 29th January 2019 01:50 AM | அ+அ அ- |

பெருந்துறையை அடுத்த சீனாபுரம் தி ரிச்மாண்ட் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.கே.முத்துசாமி தலைமை வகித்தார். ரிமாண்ட் சி.பி.எஸ்.இ. பள்ளித் தாளாளர் பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி செயல் இயக்குநர் ஏ.கே.தமிழரசி கோபால்சாமி வரவேற்றார். ஈரோடு பீனிக்ஸ் பயிற்சி அகாதெமியின் சி.இ.ஓ. எம்.சண்முகசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கிவைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி கே.எம்.பச்சையப்பன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், ஆந்திர ஐ.ஐ.டி. டெக்னோ தலைவர் நாகேஸ்வரராவ் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.
முன்னதாக, மெட்ரிக். பள்ளி முதல்வர் மா.லட்சுமணன், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ரேணுகா ஆகியோர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அறக்கட்டளை உறுப்பினர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.