பெருந்துறை விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா
By DIN | Published On : 29th January 2019 01:48 AM | Last Updated : 29th January 2019 01:48 AM | அ+அ அ- |

பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 27 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். பெருந்துறை மாவட்டக் கல்வி அலுவலர் த.ராமன் முன்னிலை வகித்தார். தாளாளர் சென்னியப்பன் வரவேற்றார். முதல்வர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை (ஆர்.எம்.எஸ்.ஏ.), கூடுதல் திட்ட இயக்குநர் பி.குப்புசாமி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிப் பொருளாளர் மாணிக்கமூர்த்தி நன்றி கூறினார்.