Enable Javscript for better performance
ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரதோஷ விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த ஆனி மாத பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
     ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கோயில் மூலவர் சன்னதியின் எதிரில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றன.
    அதைத் தொடர்ந்து, விழா மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
    இதில் ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai