சுடச்சுட

  

  ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த  பாசூர் அருகே பள்ளி வேன் மோதிய விபத்தில்  இளைஞரின் தலை துண்டானது. 
  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஈபி காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் இருசக்கர வாகனத்தில்  கொடுமுடி சென்றுவிட்டு ராசிபுரத்துக்கு திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தார்.  
  சோளங்காபாளையத்திலிருந்து பாசூர் செல்லும் சாலையில் ஆர்.கே.புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, கருமாண்டாம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வேன் பிரகாஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பிரகாஷ் தூக்கி வீசப்பட்டு வழிகாட்டி பலகையில் மோதியதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு சாலையில் விழுந்தது. 
  தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு விரைந்த மலையம்பாளையம் காவல் துறையினர் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai