சுடச்சுட

  

  மேட்டுப்பாளையம் பிரிவு வாய்க்காலில் குடிமராமத்துப் பணி துவக்கம்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பாசன திட்டத்தில் கோபி உபகோட்டத்தில் தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தில் பாசன வாய்க்கால் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 
  யூ பாசன சபைக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பிரிவு வாய்க்காலில் ரூ.27 லட்சம் செலவில் பாசன வாய்க்கால் தூர்வாருதல், டிராப்புகள் பழுதுபார்த்தல், குறுக்கு கட்டடங்கள் சீரமைத்தல் போன்ற பணிகள் பாசன சபைத் தலைவர் அ.செ.பழனிசாமி தலைமையில் தொடங்கியது. பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் பி.செல்வராசு முன்னிலையில் கூட்டமைப்பு இணைச் செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி பணிகளை துவக்கி வைத்தார்.
  கவுந்தம்பாடி பிரிவு வாய்க்காலில் யு8பி பாசன சபைக்கு உள்பட்ட பட்டையக்காளிபாளையம், மாரப்பம்பாளையம், வடகாட்டுப்பாளையம் உபகிளை வாய்க்கால்கள் தூர்வாரவும், பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கான ரூ.28.50 லட்சம் செலவிலான பணிகளை தலைவர் பி.ஆர்.ஏகாம்பரம் துவக்கி வைத்தார். வேலம்பாளையம் கிளை வாய்க்காலில் ரூ.29 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகளை யு8ஏ தலைவர் வி.ஆர்.குமார் துவக்கி வைத்தார்.   யு 9 பாசன சபையில் ரூ.24.75 லட்சம் செலவில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. யு3பி பாசன சபைத் தலைவர்  கே.எம்.கார்த்திகேயன் தலைமையில் ரூ.22 லட்சம் செலவில் பிரிவு வாய்க்கால் பணிகள் தொடங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில்  உதவிப்பொறியாளர்  எஸ்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai