சுடச்சுட

  

  ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது. 
  பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி சத்தி சாலை வழியாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
  பேரணியில் பங்கேற்ற மாணவிகள் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். இதில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai