சுடச்சுட

  

  கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை: ஜூலை 15 முதல் கொள்முதல் துவக்கம்

  By DIN  |   Published on : 13th July 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூலை 15 ஆம் தேதி முதல் கொப்பரை கொள்முதல் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார். 
  இதுகுறித்து  அவர் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
  தமிழக அரசு தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.95.21க்கும், பந்து தேங்காய் கொப்பரை ஒரு கிலோ ரூ.99.20க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
  இந்த குறைந்தபட்ச விலை ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
  இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். 
  மேலும், தேங்காய் கொப்பரைக்கு உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai