சுடச்சுட

  

  சித்தோட்டில் இருப்பிடச் சான்று கேட்டு முற்றுகைப் போராட்டம்

  By DIN  |   Published on : 13th July 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சித்தோடு அருகே இருப்பிடச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயனற 34 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
  ஈரோடு அருகே உள்ள பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 23 குடும்பத்தினர், சித்தோடு அருகே உள்ள கன்னிமார்காடு பகுதியில் குடிசைகள் அமைத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
  இவர்கள், நிரந்தரமாக பட்டா பெறும் வகையில் இருப்பிடச் சான்று கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், திராவிடர் பேரவை அமைப்பாளர் மாசிலாமணி பாபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சித்தோடு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.இதற்கு, போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாகச் சென்ற 29 பெண்கள் உள்பட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai