சுடச்சுட

  

  மக்கள் நீதிமன்றம் மூலம் ஈரோடு மாநகராட்சியில் ரூ.29 லட்சம் வரி வசூல்

  By DIN  |   Published on : 13th July 2019 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்கள் நீதிமன்றம் மூலம் ஈரோடு மாநகராட்சியில் ரூ.29 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
   ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளும், தொழில் நிறுவனங்களில் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  முதல் கட்டமாக வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் உத்தரவின்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவ்வாறு. நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன்பின்னரும் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து நீதிமன்றம் மூலமாக வரியை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காண முயற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி செலுத்த உத்தரவிட்டது.  
  மேலும், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலுவைத் தொகை செலுத்துவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் விசாரணை ஜூலை 8 ஆம் தேதி  தொடங்கியது. நீதிபதி ராஜூ தலைமையிலான குழுவினர் நிலுவைத் தொகை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்தனர்.
  அதன்படி ஜூலை 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.29 லட்சத்து 7 ஆயிரத்து 823 வசூலிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai