மொடக்குறிச்சியில் 30 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 13th July 2019 08:49 AM | Last Updated : 13th July 2019 08:49 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 30.6 மி.மீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பல இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழை இல்லாத நிலையில், இப்போது பெய்துள்ள மழை பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 30.6 மி.மீ மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) சென்னிமலை 27.6, பெருந்துறை 4, ஈரோடு 3, கொடுமுடி 2, பவானி 1 மி.மீ மழை பதிவானது.