குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்யாமல் ரூ.3.43 லட்சம் செலவுக் கணக்கு காட்டியதாக புகார்

சத்தியமங்கலத்தை அடுத்த உத்தண்டியூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  சமூக

சத்தியமங்கலத்தை அடுத்த உத்தண்டியூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் குடிநீர்த் தொட்டி சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாக கணக்கு காட்டி ரூ.3.43 லட்சம் மோசடி செய்ததாக கிராம இளைஞர்கள் புகார் தெரிவித்தனர்.
பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், உத்தண்டியூர் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்தார்.
கிராம மக்கள் முன்னிலையில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நூறு நாள் வேலை திட்ட பெண் பணியாளர்களுக்கு ரூ.229 அளிப்பதாக தீர்மானம் நிறைவேறியது. இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தினக்கூலியாக நபர் ஒருவருக்கு ரூ.150 முதல் ரூ.170 மட்டுமே வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.
பெண்களுக்கு அளிக்கப்பட்ட வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதாக ஊராட்சி செயலாளர் ராஜு பதிலளித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், உத்தண்டியூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்துக்கு கிராம மக்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் செலவு ஆவணங்கள் காட்டுப்படுவதில்லை என புகார்கள் தெரிவித்தனர்.
உத்தண்டியூர் ஊராட்சியில் மொத்தம் 40 மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டியை ஒருமுறை கூட சுத்தம் செய்யவில்லை. ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை சுத்தம் செய்ததாக பொய் கணக்கு காட்டி ரூ.3.43 லட்சம் மோசடி செய்ததாக கிராம இளைஞர்கள் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சியில் குடிநீர்ப் பிரச்னை இல்லை. ஆனால், லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கணக்குகளை தணிக்கை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com