பொது விநியோகத் திட்டம் குறித்து இன்று குறைகேட்புக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடர்பாக வட்ட

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடர்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது.  
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகள் பெறுவது குறித்தும் உயர்நிலை அலுவலர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறியும் கூட்டம் வருவாய் வட்டம் தோறும் ஒரு நியாய விலைக்கடையில் நடைபெறவுள்ளது. ஈரோடு வட்டத்தில் கரைஎல்லப்பாளையம் நியாய விலைக்கடை வளாகம், பெருந்துறை வட்டத்தில் பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், மொடக்குறிச்சி வட்டத்தில் குளூர் நியாய விலைக்கடை வளாகம், பவானி வட்டத்தில் ஜம்பை பேரூராட்சி மன்ற அலுவலகம், நம்பியூர் வட்டத்தில் குருமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கூட்டம்  நடைபெறுகிறது. 
கோபி வட்டத்தில் சிறுவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், சத்தியமங்கலம் வட்டத்தில் இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம்,  அந்தியூர் வட்டத்தில் பர்கூர் கோயில் நத்தம் நியாய விலைக் கடை வளாகம், கொடுமுடி வட்டத்தில் கொம்பனைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம், தாளவாடி வட்டத்தில் மல்லன்குழி நியாய விலைக் கடை வளாகத்திலும் கூட்டம்  நடைபெறும். 
இக்கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர்,  கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், கூட்டுறவு சங்கச் செயலர் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  
எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பாக அலுவலர்களிடம் நேரில் தெரிவித்தும், மனுக்களை அளித்தும் அதற்கான தீர்வுகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com