சுடச்சுட

  

  அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பிஎஸ்என்எல் சார்பில் சிறப்பு சிம் கார்டு

  By DIN  |   Published on : 14th July 2019 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இமயமலையில் தெற்கு காஷ்மீரத்தில் உள்ள புனித அமர்நாத் குகைக்கோயில் செல்லும் யாத்ரீகர்களுக்காக, ஜம்மு மற்றும் காஷ்மீர் பிஎஸ்என்எல் தொலை தொடர்பு வட்டம் சார்பில் சிறப்பு சிம் கார்டு வழங்கப்படுகிறது.
  தொலைத்தொடர்பு வசதிக்காக இலகுவான தொலைத்தொடர்பு இணைப்பை அளிக்கும் வகையில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பிஎஸ்என்எல் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
  இதர மாநில செல்லிடப்பேசி பிரீபெய்டு இணைப்புகளை பயன்படுத்த ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அனுமதி இல்லை என்பதால், உள்துறை அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அனுமதியுடன்சிறப்பு யாத்ரா சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
  இந்த சிம் கார்டு விலை ரூ.230. இருபதாயிரம் நொடிகள் இலவச டாக்டைம், 1.5 ஜி.பி. இலவச டேட்டா, 10 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். யாத்ரா சிம் கார்டுகளை பெற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களான முகவரி சான்று, அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றுடன், எஸ்ஏஎஸ்பி அளித்துள்ள யாத்ராவுக்கான பதிவு சீட்டின் உண்மை நகலையும் சான்றாக அளிக்க வேண்டும்.
  இந்த சிம் கார்டு லகன்பூர் பேஸ் கேம்ப் சுற்றுலா பயண வரவேற்பு மையம், பகவதி நகர், ஜம்மு பேஸ் கேம்ப், கச்சி சாவ்னி, ஜம்மு மெயின் எக்ஸ்சேஞ்ச் வாடிக்கையாளர் சேவை மையம், திரிகூட நகர், ஆர்பிஐ கட்டடம் அருகில் உள்ள மெயின் எக்ஸ்சேஞ்ச் வாடிக்கையாளர் சேவை மையம், பல்டால் மற்றும் பாகல்காம் பேஸ் கேம்ப், ஸ்ரீநகர் ரயில் நிலையம் அருகே நவ்கம் சுற்றுலா பயண வரவேற்பு மைய அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். வேறு இடங்களில் இந்த சிம் கார்டுகளை பெற இயலாது. மேலும் விபரங்களுக்கு  
   இணைய தள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.
  இத்தகவல் ஈரோடு தொலைதொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai