சுடச்சுட

  

  பெருந்துறை ஸ்ரீஸ்வாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மழை நீர் சேமிப்பு, மரங்கள் வளர்த்தல், நீர்நிலைகளை தூய்மையாக வைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி சென்றனர். 
  இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவர் டி.சி.கே.சின்னசாமி தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார்.  பேரணியை, தாளாளர் சென்னியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பெருந்துறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.  இதில் பள்ளியின் தேசிய பசுமைப் படை, சுற்றுச் சூழல் மன்றம், பாரத சாரண சாரணியர் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள், ஆசிரிய,  ஆசிரியைகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai