ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்: கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 28இல் பேச்சுப் போட்டி

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை கல்லூரிகள் வரும் 26ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 2 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் தமிழக அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள யுஆர்சி பழனியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அரங்கில் வரும் 28ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
முதல் சுற்றுக்கான தலைப்பு: குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு, கால அளவு 3 நிமிடங்கள், ஒரு கல்லூரியிலிருந்து அதிகபட்சம் 3 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்து அனுப்பலாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருப்பின் தலா 10 பேர் வீதம் பங்கேற்கலாம். 
தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களின் பெயர் பட்டியல் முதல்வரின் அறிமுகக் கடிதத்துடனும், பல்கலைக்கழக மாணவர்களின் பெயர் பட்டியல் பல்கலைக்கழகப் பதிவாளரின் அனுமதி கடிதத்துடனும் ஜூலை 26ஆம் தேதிக்குள் ண்ய்ச்ர்ஃம்ஹந்ந்ஹப்ள்ண்ய்ற்ட்ஹய்ஹண்ல்ங்ழ்ஹஸ்ஹண்.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சலுக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று கல்லூரி முதல்வர் அல்லது பதிவாளர் அறிமுக கடிதத்தை மாணவர்கள் நேரில் கொண்டுவர வேண்டும். போட்டியன்று காலை 8 மணிக்கே அரங்கிற்குள் வந்து போட்டியாளர்கள் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முதல்சுற்று முடிந்து அதில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு, இறுதிச்சுற்று தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக புதிய தலைப்பு கொடுக்கப்படும். இறுதிச் சுற்றுக்கான கால அளவு 5 நிமிடங்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் நிகழ்ச்சியின் நிறைவில் அரங்கிலேயே வழங்கப்படும். 
மிக மூத்த மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தவிர்த்து அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 என 3 பரிசுகள் அளிக்கப்படும். இப்பரிசுகள் ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் வழங்கப்படும். அதே மேடையில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்குத் தலா 5 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ 47, சம்பத் நகர், ஈரோடு- 638011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2269186 என்ற தொலைபேசி எண், 9489123860 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, www.makkalsinthanaiperavai.org, www.erodebookfestival.org என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com