சாலை விபத்தால் கோமா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் சுயநினைவிழந்து கோமா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


சாலை விபத்தில் சுயநினைவிழந்து கோமா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிறுமுகையை அடுத்த ராமாபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அன்று தனது மகன் பார்த்தீபனுடன், சிறுமுகையில் இருந்து இரு சக்கரவாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்று கொணடிருந்தார்.
பார்த்தீபன் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். பின்னால் விஜயலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது தொட்டிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது உதகையைச் சேர்ந்த சிந்தேகுண்டே என்பவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.  
இது குறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் கோமா பாதிப்புடன் வாழ்ந்து வரும் விஜயலட்சுமி சார்பில், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்தி, காப்பீடு நிறுவனம், மனுதாரரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி,  ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் விஜயலட்சுமிக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை பெறுவதற்கு விஜயலட்சுமி ஜீப்பில் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தில் அமர்ந்திருந்த விஜயலட்சுமிக்கு இழப்பீடு தொகைக்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com