பவானிசாகர் நீர்மட்டம் 58.99 அடி
By DIN | Published On : 19th July 2019 08:57 AM | Last Updated : 19th July 2019 08:57 AM | அ+அ அ- |

பவானிசாகர் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 58.99 அடியாக இருந்தது. அணையின் நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2,301 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 6.9 டிஎம்சி.