Enable Javscript for better performance
குண்டேரிப்பள்ளம் அணையைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குண்டேரிப்பள்ளம் அணையைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published On : 23rd July 2019 08:15 AM  |   Last Updated : 23rd July 2019 08:15 AM  |  அ+அ அ-  |  

    கட்டப்பட்டு 39 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை ஒரு முறை கூட தூர்வாரப்படாததால், குண்டேரிப்பள்ளம் அணையில் நீர்ப் பிடிப்பு பாதியாகக் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
    மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு குண்டேரிப்பள்ளம் அணையை முழுமையாகத் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். அப்போது அணையிலிருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கோபி அருகிலுள்ள குன்றி மலையடிவாரத்தில் 39 ஆண்டுகளுக்கு முன்னர் குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபா நகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மொத்தம் 42 அடி உயரமுள்ள இந்த அணை, கட்டப்பட்டது முதல் இதுவரை தூர்வாரப்படவில்லை. மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையில் மண் மேவிவிட்டதால் தண்ணீர் கொள்ளளவு பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. 
    இந்த அணையைத் தூர் வார வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாகவே இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனர். பிறகு அவர்கள் கூறியதாவது:
    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கு அடுத்து பெரிய அணையாக  குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை மழைக் காலங்களில் முழுமையாக நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேறினாலும், அணையில் இருக்கும் தண்ணீர் பாசனத்துக்கு 40 நாள்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அணை நிரம்பினால் 70 நாள்கள் வரை பாசனத்துத்துக்குத் தண்ணீர் விடப்படும். 
    அணை கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் முடிந்த நிலையிவல், இதுவரை முழுமையாகத் தூர்வரப்படவில்லை. நிகழாண்டில் தமிழகம் முழுவதும் 537 ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அந்தப் பட்டியலில் குண்டேரிப்பள்ளம் அணை இடம்பெறவில்லை. 
    இந்த அணையைத் தூர்வார வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 
    வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அணையை முழுமையாகத் தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தூர் வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp