கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு
By DIN | Published On : 24th July 2019 08:47 AM | Last Updated : 24th July 2019 08:47 AM | அ+அ அ- |

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வராக வி.பாலுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த எஸ்.குப்புசுவாமி அண்மையில் பணி ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி கல்லூரியில் உலோகத் துறையில் பேராசிரியராக பணியாற்றிய வி.பாலுசாமி கொங்கு பொறியியல் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 34 ஆண்டுகள் தொழில் துறையிலும், பொறியியல் கல்லூரியிலும் அனுபவம் பெற்றவர்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வரை கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி, செயலாளர் பி.சத்தியமூர்த்தி, கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலம், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, கொங்கு கலைக் கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.சி.பழனிசாமி, பி.சச்சிதானந்தன் ஆகியோர் வாழ்த்தினர்.