தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு விவசாயிகள் இயக்கம் ஆதரவு
By DIN | Published On : 24th July 2019 08:48 AM | Last Updated : 24th July 2019 08:48 AM | அ+அ அ- |

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கும், கங்கை-குமரி தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்துக்கும் விவசாயிகள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில், தேசிய நதிகள் இணைப்பு, கங்கை-குமரி தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான பொதுக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காசியண்ண கவுண்டர் தலைமை வகித்தார். "நாம்' இயக்கத்தின் மாநிலத் தலைவர் பிரபுராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கங்கையிலிருந்து குமரிவரை தேசிய நீர்வழிச் சாலை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நீர் வழிச்சாலை அமைந்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த மத்தியஅரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அத்திக்கடவுஅவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்பட 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.