Enable Javscript for better performance
இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை: கொங்கு பொறியியல் கல்லூரியில் மையம்- Dinamani

சுடச்சுட

    

    இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை: கொங்கு பொறியியல் கல்லூரியில் மையம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நடப்பு ஆண்டு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. சேர்க்கை குறித்த விவரங்களை அறிய கொங்கு பொறியியல் கல்லூரியை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பொருளாதாரம், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் உயர் கல்வியை மேற்கொள்ள முடியாத இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான உயர் கல்வியை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கும்பொருட்டு மத்திய அரசால் 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 
    சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை என சுமார் 220 வகையான பாடப் பிரிவுகள் இக்கல்வி நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்படுகின்றன.  
    இதில் பிளஸ் 2 முடிக்காதவர்கள் ஆயத்தப் பாடம் மூலம் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான விரிவான விவரங்களை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n  என்ற இணையதளத்தில் காணலாம்.  
    மேலும், விவரங்களுக்கு இக்னோ கல்வி மையான பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியை நேரிலோ அல்லது 04294-226696, 225252, 226555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai