Enable Javscript for better performance
கடம்பூர் மலைப் பகுதியில்  4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடம்பூர் மலைப் பகுதியில்  4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 4 பேர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடம்பூர் மலைப் பகுதியில் அனுமதியின்றி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதி குன்றி கிராமத்தில் அனுமதியின்றி சிலர் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கடம்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸார் குன்றி கிராமத்தை ஒட்டியுள்ள பள்ளத்தில் மறைத்து வைத்திருந்த 4 ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கிகளைக் கண்டெடுத்தனர்.
    இதுதொடர்பாக, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் குன்றி மாகாளிதொட்டி கிராமத்தைச் சேர்ந்த மரியன் (எ) சிக்கண்ணா (40), குன்றி ஆனந்தா நகரைச் சேர்ந்த மாதன் (எ) ஜேசுராஜ் (50), சின்னப்பையன் (45), ஜான்ஜோசப் (எ) பெரியசாமி ஆகிய 4 பேர் நாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு இரவு நேரத்தில் வனப் பகுதிக்குச் சென்று வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, கடம்பூர் போலீஸார் 4 பேரையும் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே கடம்பூர் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 10 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai