Enable Javscript for better performance
குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னை சத்யா நகர் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து அன்னை சத்யா நகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் பெருமாள், செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
    ஈரோடு, அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 448 வீடுகள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 330 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
    மொத்தம் 778 குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 3,000 பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 500 பேருக்கு மேல் அமரும் சமுதாயக் கூடம், கழிப்பறை, தண்ணீர், சமையல் கூட வசதி, 500 சதுரடிக்கு குறையாமல் நூலகம், 1,500 சதுரடி அளவில் உடற்பயிற்சி கூடம், கபடி, வாலிபால், கோகோ, கராத்தே போன்ற விளையாட்டு, தற்காப்பு கலைகளை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
    மேலும் சிறுவர் பூங்கா, வணிக வளாகம் கட்ட வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். புதிய ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். பல பெரிய குடியிருப்புடன் வளாகம் உள்ளதால் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, அதனைப் பயன்படுத்தும் வகையில் மாற்றித்தர வேண்டும்.
    முதலுதவி மையம், நியாய விலைக்கடை, சங்க அலுவலகம் போன்றவை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai