Enable Javscript for better performance
குட்டப்பாளையம் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    சென்னிமலை அருகே குடிமராமத்து திட்டத்தில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ஈரோடு மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட குளம், குட்டை தூர்வாரப்படாமல் உள்ளது. இவற்றை ஆழப்படுத்தவும், தண்ணீரை அதிக அளவில் தேக்கவும், குடிமராமத்து திட்டத்தில் விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
    இதன்படி, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அடுத்த குட்டப்பாளையத்தில் 120 ஏக்கர் பரப்பிலான சின்ன குளத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
    இதையடுத்து, டிராக்டர், லாரிகள் மூலமாக விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்து செல்கின்றனர். 
    பறவைகளின் எச்சம், குப்பை சேர்ந்துள்ளதால் நல்ல இயற்கை உரமாக பயன்படும். மஞ்சள் மற்றும் கரும்பு, வாழை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai