Enable Javscript for better performance
கோபியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கோபி ஊராட்சி ஒன்றியத்தில் 274 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான புத்தகப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
    கோபி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 91 பள்ளிகளைச் சேர்ந்த 274 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடப் புத்தகப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடப் புத்தகப் பயிற்சி என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் பாட வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
    கோபி வட்டார அளவில் ஆறு நாள்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதன்படி கோபி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 274 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். புதிய பாடத் திட்டத்தின் உட்பொருளை மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் கொண்டுச் செல்வதே இந்தப் பயிற்சியின் நோக்கம் ஆகும்.
    ஈரோடு வட்டார அளவில் 1,337 ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai