Enable Javscript for better performance
கோபி கல்லூரியில் பழகுநர் உரிமம் வழங்கும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோபி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்திலேயே பழகுநர் உரிமம் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கோபி கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பழகுநர் உரிமம் வழங்கும் விழா கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் பி.கருப்பண்ணன், செயலர் மற்றும் தாளாளர் எம்.தரணிதரன், டீன் ஆர்.செல்லப்பன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் சிறப்பு விருந்தினராக கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.பழனிவேலு கலந்து கொண்டார். 
    கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே பழகுநர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.பிரதீபா வழங்கினார். இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 
    நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் கே.ராஜேந்திரன்  வரவேற்றார். பேராசிரியை டி.தமிழ்செல்வி நன்றி கூறினார். முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்  பேராசிரியர்கள் வி.அழகரசன், கே.சரவணகுமார், சந்தோஷ்குமார், ஜோதிமணி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai