Enable Javscript for better performance
திம்பம் மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: இருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திம்பம் மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: இருவர் காயம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திம்பம் மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
    கர்நாடக மாநிலம், பெங்களுரு பகுதியில் இருந்து கம்பளி பாரம் ஏற்றிய லாரி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
    லாரியை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (40) இயக்கினார். வடமாநிலத்தைச் சேர்ந்த அமர்ந்த் சிங் என்பவர் உடனிருந்தார். அப்போது, 2 ஆவது கொண்டைஊசி வளைவில் லாரி திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டது.
    இந்த விபத்தில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai