Enable Javscript for better performance
துப்பாக்கி பழுது பார்க்கும்போது குண்டு பாய்ந்து ஆயுதப் படை காவலர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கி பழுது பார்க்கும்போது குண்டு பாய்ந்து ஆயுதப் படை காவலர் காயம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாளவாடி வனச் சரக அலுவலகத்தில்  துப்பாக்கி பழுதுநீக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக வயிற்றில் குண்டு பாய்ந்ததில் ஆயுதப் படை காவலர் படுகாயமடைந்தார்.
    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி ஆகிய 7 வனச் சரக அலுவலகங்களில் வனத் துறையினர் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை ஈரோடு ஆயுதப் படையைச் சேர்ந்த துப்பாக்கி பழுது நீக்கும் காவலர் ஆய்வுசெய்து பழுது நீக்குவது வழக்கம்.
    இந்நிலையில், ஈரோடு ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் பிரேம்குமார் தாளவாடி அருகே சிக்கள்ளி கிராமத்தில் உள்ள தாளவாடி வனச் சரக அலுவலகத்தில் துப்பாக்கிகளில் பழுது நீக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் கைபட்டு அதிலிருந்து குண்டு வெளியேறி பிரேம்குமாரின் வயிற்றில் பாய்ந்தது. துப்பாக்கி குண்டு வெடித்த சப்தம் கேட்ட வனத் துறையினர், மயங்கி கிடந்த காவலர் பிரேம்குமாரை உடனடியாக மீட்டு கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai