Enable Javscript for better performance
புதை சாக்கடையுடன் வீட்டுக் கழிவுநீர் குழாய் இணைக்க 7 நாள்கள் அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    புதை சாக்கடையுடன் வீட்டுக் கழிவுநீர் குழாய் இணைக்க 7 நாள்கள் அவகாசம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதை சாக்கடை குழாயுடன் வீட்டுக் கழிவுநீர் குழாயை 7 நாள்களுக்குள் இணைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஈரோடு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி சட்டப் பிரிவுகளின் படி வீட்டில் சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை விஞ்ஞான முறைப்படி சுத்தகரிப்பு செய்ய வசதியாக புதை சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி கட்டடம் அல்லது நிலத்தின் கழிவு நீரை மழைநீர் வடிகாலில் விடக்கூடாது. மனிதர்கள் மூலம் மனிதக் கழிவுகள் அகற்றும் வேலை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதை சாக்கடை இணைப்பு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
    எனவே 7 நாள்களுக்குள் ஈரோடு மாநகராட்சியில் அதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் மூலம் தங்களது கட்டடங்களுக்கு கழிவுநீர் குழாய் இணைப்பு செய்திட வேண்டும். தவறும் பட்சத்தில் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். இப்பணிக்காக பொதுமக்கள் ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வித செலவுத்தொகையும் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai