Enable Javscript for better performance
பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.      
    பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4,568 மூட்டைகளில், 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 
    இதில்,  முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.86.75க்கும், அதிகபட்சமாக ரூ.95.75க்கும்  விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.54க்கும்,     அதிகபட்சமாக ரூ.85.90க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1.88 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai