Enable Javscript for better performance
பெருந்துறையில் 970 மாணவ,  மாணவிகளுக்கு மடிக்கணினி- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 9 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 970 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
    விழாவுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் த.ராமன் தலைமை வகித்தார். பெருந்துறை வட்டாட்சியர் க.துரைசாமி, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    திங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராயன்  வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 
    இதில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துளசிமணி, பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ், நகர செயலாளர்கள் கல்யாண சுந்தரம், கே.எம்.பழனிசாமி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.  பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கு.சரஸ்வதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai