Enable Javscript for better performance
பெருந்துறை காசநோய் மருத்துவமனையில் ரூ.7.5 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வார்டு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை காசநோய் மருத்துவமனையில் ரூ.7.5 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வார்டு திறப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ராமலிங்கம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் ஜே.கே.கே. நிறுவனம் மூலம் ரூ.7.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட உள்நோயாளி தங்கும் அறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    பெருந்துறை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும்,  ராமலிங்கம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், பவானி, குமாரபாளையம் ஜே.கே.கே. அங்கப்ப செட்டியார் குடும்பத்தாரால் கடந்த 1974 ஆம் ஆண்டு தனி உள்நோயாளி தங்கும் அறை (காட்டேஜ் வார்டு) கட்டித் தரப்பட்ட து. இந்த சேதமடைந்ததால் அறைகளை புனரமைத்து, மராமத்துப் பணிகளை செய்து கொடுத்து உதவுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
    இதையடுத்து, ரூ.7.5 லட்சம் செலவில் உள்நோயாளி தங்கும் அறை புரனமைக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக  புதன்கிழமை திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜே.கே.கே.அங்கப்ப செட்டியார் குடும்பத்தாரால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இதில், கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் ஏ.சந்திரபோஸ், துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சமூக நலத் துறை தலைவர் மருத்துவர் ஆர்.சுப்புராம் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பள்ளி முதல்வர், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai