Enable Javscript for better performance
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 99.25 சதவீதம் கடன் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 99.25 சதவீதம் கடன் வசூல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வழங்கப்பட்ட கடனில் 99.25 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 
    இது குறித்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் கூறியதாவது:
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2018-2019ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பெய்தது. இதனால், விவசாயிகள் சாகுபடி பரப்பளவை அதிகரித்தனர். அப்போது, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் பயிர்க் கடனாக ரூ.631 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு அளவில் கடன் வழங்கப்பட்டது.  
    இதேபோல், நடப்பு ஆண்டும் ரூ.800 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு ஆண்டு மழை குறைவாக உள்ளதாலும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாததாலும், கிணற்று பாசனம் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் மட்டுமே கடன் பெற்றுள்ளனர்.
    இதனால், ரூ.50 கோடிக்கு குறைவாக விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். ஆற்றிலும், வாய்க்காலிலும் நீர் திறக்கும்போது அல்லது பருவ மழை வந்ததும் விவசாயிகள் அதிக அளவில் பயிர்க் கடன் பெற வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பயிர்க் கடன் இலக்கு முழுமையாக எட்டிவிடுவோம். தற்போது ரூ.55 கோடிக்கு மத்திய கால கடனும், ரூ.96 கோடிக்கு நகைக் கடனும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி அளவுக்கு கறவை மாட்டு கடன் வழங்கப்படவுள்ளது. 
    கடந்த ஆண்டுகளில் பயிர்க் கடன், சிறு தொழில் கடன், மத்திய கால கடன் என அனைத்திலும் 99.25 சதவீத தொகையை பயனாளிகள் வங்கியில் திரும்ப செலுத்திவிட்டனர். இதனால், மத்திய கூட்டுறவு வங்கிக்கு வராக்கடன் இல்லை என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai