Enable Javscript for better performance
ராஜா கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ராஜா கருப்பண்ண சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    ஈரோடு, ராஜாகாடு பகுதியில் உள்ள ராஜா கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பு பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து எலவமலையில் உள்ள பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. இதில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். 
    பின்னர் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பவானி தீர்த்த மஹா அபிஷேகமும் புதன்கிழமை நடந்தது. அபிஷேகம் முடிந்த பின்பு ராஜா கருப்பண்ண சுவாமி வெள்ளைக் குதிரையில் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
    அதையடுத்து சுவாமிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவு பெற்றது. இதில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு, சிதம்பரம் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai