Enable Javscript for better performance
ரூ.1.70 கோடி செலவில் காளிங்கராயன் வாய்க்காலில் குடிமராமத்துப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1.70 கோடி செலவில் காளிங்கராயன் வாய்க்காலில் குடிமராமத்துப் பணி

    By DIN  |   Published on : 25th July 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காளிங்கராயன் வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி செலவில் வாய்க்கால் மதகு, கரைகள் பலப்படுத்தும் பணியை பொதுப் பணித் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் சண்முகம் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
    காளிங்கராயன் வாய்க்காலில் ஒன்றாவது மைல் முதல் 56 ஆவது மைல் வரையிலான தூரத்தில் அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டு ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
    இத்தொகை பொதுப் பணித் துறை மற்றும் அந்தந்த பகுதி பாசன சபை மூலம் குடிமராமத்துப் பணிக்காக செலவிடப்படுகிறது. காளிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு சார்பில் கொடுமுடி, வெங்கம்பூர், கொள்ளுக்காட்டுவலசு பகுதிகளில் மதகு கட்டுதல், தற்காப்பு சுவர் அமைக்கும் பணி, தரைத் தளத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், கரைகளை ஆழம் மற்றும் அகலமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
    இதுகுறித்து காளிங்கராயன் பாசன சபை கூட்டமைப்பு செயலாளர் ஆர்.செல்வகுமார் கூறியதாவது:
    கடந்த சில நாள்களாக கொடுமுடி பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் குடிமராமத்துப் பணி நடக்கிறது. குறிப்பாக அனைத்து மதகுகளும் சீரமைத்து புதிதாக கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    கரைகள் வலுவிழந்த இடங்களிலும், தற்காப்பு சுவர் தேவைப்படும் பகுதியிலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டன. மதகு பகுதியை ஒட்டிய இடங்களில் தரைத் தளத்தில் கான்கிரீட் தளமாக அமைத்து அரிப்பை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப் பணித் துறை திருச்சி சிறப்பு தலைமைப் பொறியாளர் சண்முகம் ஆய்வு செய்தார். பணி முழுமையாக நிறைவு பெற்றால் மழை மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வரும்போது, கடைமடை வரை முழுமையாக தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai