Enable Javscript for better performance
10 வருவாய் வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் உள்ள ஒரு வருவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை26) அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன. 
    இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    ஈரோடு வட்டத்தில் பெரியசேமூர் அ கிராம நிர்வாக அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் திங்களூர் கிராம சேவை மைய கட்டட வளாகம், மொடக்குறிச்சி வட்டத்தில் புஞ்சை காளமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் புஞ்சை கிளாம்பாடி அ கிராம நிர்வாக அலுவலக வளாகம்,  பவானி வட்டத்தில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது.
    சத்தியமங்கலம் வட்டத்தில் பழைய கலையனூர் கிராம நிர்வாக அலுவலகம், கோபி வட்டத்தில் நஞ்சை புளியம்பட்டி கிராம சேவை மைய கட்டட வளாகம், அந்தியூர் வட்டத்தில் சங்கராபாளையம் சமுதாயக் கூட வளாகம், தாளவாடி வட்டத்தில் இக்கலூர் பாளப்படுகை சமுதாயக் கூடம், நம்பியூர் வட்டத்தில் நம்பியூர் சமுதாயக் கூடத்திலும் முகாம் நடைபெறும். வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai