Enable Javscript for better performance
குடிநீர்த் தட்டுப்பாடு: பழுதான மின்மோட்டாரை சீரமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை: ஆட்சியரிடம் மனு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு

    குடிநீர்த் தட்டுப்பாடு: பழுதான மின்மோட்டாரை சீரமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை: ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published On : 30th July 2019 08:28 AM  |   Last Updated : 30th July 2019 08:28 AM  |  அ+அ அ-  |  

    ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டர் பழுது சரி செய்யாததால் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக மலைவாழ் மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்னகரை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தொடக்கத்தில் மலைப் பகுதியில் ஆங்காங்கே ஓடும் காற்றாற்று தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், மழைப் பொழிவு சரிவர இல்லாததால் ஆறுகள் வறண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து பர்கூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒன்னகரையில் ஆழ்துளை கிணறு அமைத்து 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.  
    இந்நிலையில் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் அதை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தண்ணீர் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.
    இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒன்னகரை மலைக்கிராம பொதுமக்கள் சார்பில் ஆட்சியர் சி.கதிரவனிடம்  மனு அளிக்கப்பட்டது.
    இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
    அரசுப் பள்ளி தலைமையாசிரியை மீது மாணவர்கள் புகார்:  பெருந்துறை அருகே சிங்காநல்லூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணியாற்றி வரும் தேன்மொழி மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், பாகுபாடுடன் நடந்து கொள்வதாக பள்ளி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
    சுத்திகரிப்பு நிலைய உபரி நீரை கசிவு நீர் குட்டைகளில் நிரப்ப வலியுறுத்தல்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி ஒன்றியக்குழு சார்பில் அளித்த மனு விவரம்: கொடுமுடி காவிரி ஆற்று நீரை நீராதாரமாக கொண்டு செயல்படும் காங்கயம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம் இச்சிபாளையத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுத்திகரிப்புக்கு பின்னிட்ட உபரி நீர் வீணாக வெளியேறி வருகிறது.
    இந்த உபரி நீரை இச்சிப்பாளையம் ஊர் அருகே உள்ள குளம், கசிவு நீர் குட்டைகளுக்கு திருப்பி விடக்கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீராதாரம், குடிநீர் ஆதாரம் மேம்பட வாய்ப்புள்ளது. 
    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுப்பி பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 
    உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை:  ஈரோடு, சூரியம்பாளையம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (42). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இவருக்கு பேசவும், கேட்கவும் முடியாது. இவரது சகோதரி உடன் வசிக்கிறார். திருமணம் ஆகாத இவர் சில வீடுகளில் பாத்திரங்கள் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு 100 சதவீதம் காது கேட்கவும், 95 சதவீதம் வாய் பேச முடியாது என மருத்துவர் சான்று வழங்கி உள்ளார். இந்த ஆவணங்களை வைத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதாவிடம் மனு அளித்த சித்ரா தனக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.   
    அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகளை அழைத்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை வழங்கினார். 100 சதவீதம் பேச முடியாமல் இருந்தால் மட்டுமே  உதவித்தொகை வழங்க இயலும்.
    எனவே, இவருக்கு உதவித்தொகை பெற தகுதி இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர். இவருக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை கிடைத்தால் அவரது அன்றாட செலவுகளை செய்து கொள்ள முடியும். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படாததால், அவர் வேதனையுடன் திரும்பிச் சென்றார். இதுகுறித்து ஆட்சியர் பரிசீலனை செய்து சிறப்பு நபராக தேர்வு செய்து உதவித்தொகை வழங்க வேண்டும் என உடன் வந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp