Enable Javscript for better performance
ஜூன் 4இல் வெறிநோய் தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 4இல் வெறிநோய் தடுப்பூசி முகாம்

    By DIN  |   Published on : 01st June 2019 09:22 AM  |   அ+அ அ-   |    |  

    கால்நடை மருந்தகங்களில் நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவச முகாம் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
    இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை மருத்துவப் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் ஜூன் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
    இந்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை  மருத்துவமனைகள், பன்முக மருத்துவமனைகள் என 108 இடங்களில் நடைபெறுகின்றன.
    எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் கலந்து  கொண்டு தங்களது நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். வெறி நாய்க்கடி நோய் (ரேபிஸ்) என்பது பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகள் மனிதர்கள், விலங்குகளை கடிப்பது மூலமாக பரவும் ஒரு கொடிய தொற்று நோய் ஆகும்.
    வெறிநோய் பரவுவதை தடுக்கும் வகையில் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலவச கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரைவில் தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp