கருணாநிதி பிறந்த நாள் விழா: 273 இடங்களில் கொண்டாட முடிவு

மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை மாவட்டத்தில் 273 இடங்களில் கொண்டாடுவது என மாவட்ட திமுக சார்பில் முடிவு செய்துள்ளது. 

மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை மாவட்டத்தில் 273 இடங்களில் கொண்டாடுவது என மாவட்ட திமுக சார்பில் முடிவு செய்துள்ளது. 
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் குமார்முருகேஷ் தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்தநாள் விழாவை, ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் 273 இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியை தேடித் தந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பழனிசாமி, இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில் 100 ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com