அந்தியூரில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம்
By DIN | Published On : 14th June 2019 08:54 AM | Last Updated : 14th June 2019 08:54 AM | அ+அ அ- |

அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பவானி, அந்தியூர் தீத்தடுப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு அந்தியூர் நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள், அதனைத் தடுக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, குடிசை வீடு மற்றும் வீட்டிலுள்ள உடமைகளில் தீப்பிடித்தால் அதனை அணைக்கும் விதம் குறித்தும், முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.