ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த கேரள சிறுவன் மீட்பு

ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

ஈரோடு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 
 ஈரோடு ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை இரண்டாவது நடைமேடையில் ஒரு சிறுவன் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்தான்.  அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த சிறுவன் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், அல்படம்பா பகுதியைச் சேர்ந்த முகமத் ஜாகிர் (16) என்பதும், அவர் தனது தாயிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு ரயில் மூலம் ஈரோடு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனுக்கு ரயில்வே போலீஸார் அறிவுரை கூறினர். மேலும் சிறுவனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை ஈரோடு வந்த சிறுவனின் உறவினர், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்பில் இருந்த முகமத் ஜாகிரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com