சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி: படித்த வேலையில்லாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற படித்த வேலையில்லாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற படித்த வேலையில்லாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, பின்தங்கிய குறிப்பாக படித்த வேலையில்லாத இளைஞர்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் போன்ற தொழில்களில் ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் முதலீட்டுடன் சுய தொழில்கள் தொடங்க தொழில் முதலீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. 
 படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வங்கிக் கடனுதவியை பெற, குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும், சிறப்புப் பிரிவினராகிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
 குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அப்பகுதியில் வசிப்பவராகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1,50,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ww‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌u‌y‌e‌g‌p என்ற இணையதளத்தில் விண்ணப்பப்  படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து,  பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் குடும்ப அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இரண்டு நகல்களை இணைத்து, பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை சாலை, ஈரோடு-638001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமே அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2275440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com