Enable Javscript for better performance
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம்: ஏஐடியூசி தேசிய செயலாளர் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம்: ஏஐடியூசி தேசிய செயலாளர் பேட்டி

    By DIN  |   Published on : 21st June 2019 09:52 AM  |   அ+அ அ-   |    |  

    தொழிலாளர் நலச்சட்டங்களை குறைத்துள்ளதால் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என ஏஐடியூசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்தார். 
      தமிழ்நாடு ஏஐடியூசி சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில அமைப்பு கூட்டம் மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு பிறகு ஏஐடியூசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
    மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பதவியேற்றதும், நிதி ஆயோக் செயலர் இன்னும் 100 நாள்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதன்படி 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, நான்கு  சட்டங்களாக குறைத்துள்ளனர். பணிக்கொடை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு இனி கிடைக்காது என்ற நிலை ஏற்படும். நிரந்தர வேலை, குறிப்பிட்ட ஊதியம் என்பது இருக்காது. 
    குறிப்பிட்ட காலப் பணி என்ற பெயரில், குறித்த நாளில், குறித்த ஊதியத்தில், குறித்த பணியை முடிக்க வேண்டும். அந்தத் தொழிலாளருக்கு வேறு எந்த பணி, பண பயனும் கிடைக்காது. தமிழக அரசு, துப்புரவு தொழிலாளர், டேங்க் ஆப்ரேட்டர் உள்ளிட்ட கூலி தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை.  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.16,000 என அறிவித்த ஊதியத்தை தற்போது மறுபரிசீலனை செய்து 
    குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதுபோல் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் ஊதியத்தை மறுமதிப்பீடு செய்து குறைத்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
     10 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களே இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். அப்படியானால் மால்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே செயல்படும். சிறிய கடைகள், மளிகைக்கடை, குறைந்த முதலீட்டில் ஒரு நபர் பணி செய்யும் கடைகள், அடியோடு அழிந்து போகும்.
     தற்போது, சுமைப்பணியாளர்கள் 100 முதல் 120 கிலோ மூட்டைகளைக்கூட தூக்கி வருகின்றனர். சர்வதேச அறிவுறுத்தல்படி 55 கிலோ எடைக்கு மேல் மூட்டை உள்ளிட்ட எந்த பொருள்களுக்குமான எடையை வைக்கக்கூடாது.
     சுமைப் பணியாளர்களின் நலன் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி விதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை இவர்களது நலவாரியத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp