Enable Javscript for better performance
பண்ணாரி, ஆசனூர் வனச் சோதனைச் சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்:  4 நாள்கள் மட்டுமே இலவச அனுமத- Dinamani

சுடச்சுட

    

    பண்ணாரி, ஆசனூர் வனச் சோதனைச் சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்:  4 நாள்கள் மட்டுமே இலவச அனுமதி

    By DIN  |   Published on : 21st June 2019 10:09 AM  |   அ+அ அ-   |    |  

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி முதல் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை பயணிக்கும் வாகனங்களுக்கு வனத் துறை சார்பில் வியாழக்கிழமை (ஜூன் 20) முதல் சுங்கக் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சோதனைஅடிப்படையில் 4  நாள்கள் மட்டுமே வாகனங்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 
    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம், கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த திம்பம் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதிக பாரம், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலான உயரம் காரணமாக திம்பம் பாதையில் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிக வேகம் காரணமாக, திம்பம்- ஆசனூர் சாலையில் உலவும் விலங்குகள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுப்படுத்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சார்பில் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனைச்சாவடியில் ஜூன் 20 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் அதாவது நுழைவுக் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. 
    திம்பம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். அரசு வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் வசூலிப்பது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தாலும் சோதனைஅடிப்படையில் 4 நாள்கள் இலவச நுழைவு சீட்டு வழங்கப்படும்.
    இதற்கான விழா சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வடவள்ளியில் தொடங்கியது. வாகனங்களின் எடை  அளவைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட எடை மேடையை புலிகள் காப்பகத்தின்  இயக்குநர் அருண்லால்  திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பண்ணாரியில் வாகனங்களுக்கு முதற்கட்டமாக கட்டணமில்லா நுழைவுசீட்டு வழங்கி துவக்கிவைத்தார். கட்டண நிர்ணயம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு சாலையோரங்களில் விழிப்புணர்வுப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வனத் துறை சார்பில் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம்: பயணிகள் நான்கு சக்கர வாகனங்கள் ரூ.20, வேன் கட்டணம் ரூ.30,  இலகு மற்றும் கனரக வாகனங்கள் 12 சக்கரங்கள்  அதிகபட்சமாக ரூ.100, குறைந்தபட்சம் நான்கு சக்கரம் வரை ரூ. 20.
    16 டன் பாரத்துக்கு அதிகமாக சரக்கு லாரியும் 13 அடி உயரத்துக்கு அதிகமாக பாரம் ஏற்றிய லாரியும் அனுமதிக்கப்படாது என  வனத் துறை அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பண்ணாரி முதல் ஆசனூர் வரையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வாகனங்களின் பயண நேரம் 30 நிமிடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp