பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2019 06:57 AM | Last Updated : 22nd June 2019 06:57 AM | அ+அ அ- |

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி அமர்த்தும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பவானியில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பவானி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பவானி வட்டத் தலைவர் எம்.சுதானந்த சீனிவாசன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். சங்கப் பொருளாளர் கார்த்தி கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்க நிர்வாகிகள் ராஜா, முத்துசாமி, பழனிசாமி, ராசாமணி, கிருஷ்ணவேணி உள்பட 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.