சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 26th June 2019 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோபியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.  
    கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல் துறையினர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
    தமிழகத்தில் இரு சக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதையடுத்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 
    இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம்முன்பு போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர்.
    மேலும், வாகன ஓட்டிகள் அணிந்துவரும் தலைக்கவசத்தை பார்வையிட்டு தரமானதா என்பதை உறுதி செய்தனர். தரமில்லாத தலைக்கவசத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர். 
    தலைக்கவசம் அணிந்து செல்லாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai