சுடச்சுட

  

  நெரிஞ்சிப்பேட்டையில் 118 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

  By DIN  |   Published on : 26th June 2019 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ரேணுகாதேவி தலைமை வகித்தார். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர் 117 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். 
  இதில் அம்மாப்பேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.எஸ்.சரவணபவா, துணைச் செயலர் மு.லட்சுமணன், நிலவள வங்கித் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், நெரிஞ்சிப்பேட்டை பேரூர் செயலர் எஸ்.மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai