சுடச்சுட

  

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் கோபி மின் பகிர்மான வட்டம் சத்தி பகுதியில் உள்ள மின்உபயோகிப்பாளர் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
  சத்தி-அத்தாணி சாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக செயற்பொறியாளர்அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
  மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோபி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் நேரிலேயே குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளதால் சத்தி கோட்டப் பகுதிக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai